சென்னை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது.
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதன்படி அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
ஈரோடு, திருச்சி, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன் ஹீட் வெப்பம் பதிவானது. இதேபோல் சென்னை மீனம்பாக்கம், தஞ்சாவூர், மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தியில் 100 புள்ளி 4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், நாகப்பட்டினத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.