அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்த அரசுத் திட்டமும் வழங்கப்படாது என கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் கூறிய வீடியோ வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் வேலம்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி பள்ளி கட்டடத்தை திமுக எம்.பி கதிர் ஆனந்த் திறந்து வைத்தார்.
அப்போது நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் சொந்த வீடு இல்லாமல் இருப்பதாகவும் அரசு உதவி வழங்க வேண்டும் என எம்.பியிடம் கோரிக்கை வைத்தார்.
அப்போது குறுக்கிட்ட கே.வி.குப்பம் ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன், அதிமுகவிற்கு வாக்களித்ததால் எந்தவொரு அரசு திட்டமும் வழங்கப்படாது எனக் கூறினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.