மாற்றுத் திறனாளிகளின் மனம் புண்படும்படி பேசியதற்காக நிபந்தனையற்ற வருத்தம் தெரிவிப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுக்கூட்ட மேடையொன்றில் பேச்சு வேகத்தில் மாற்றுத் திறனாளிகளை மாற்றுப் பெயர் கொண்டு உச்சரித்து விட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தனது தவற்றை உணர்ந்து அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்ததாகத் தெரிவித்துள்ள துரைமுருகன், தான் செய்த மிகப்பெரிய தவறால் மாற்றுத்திறனாளிகளின் மனம் புண்பட்டிருந்தால், அதற்காக நிபந்தனையற்ற வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார்.
இனி இதுபோன்ற தவறு நடக்காது என உறுதி அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.