பங்குனி உத்திர விழாவையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கம்பத்தடி இளையனார் முருகர் கோயிலில் ஆயிரத்து 8 காவடி எடுத்து வந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் உள்ள முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள கம்பத்தடி இளையனார் முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
அதிகாலை நடை திறக்கப்பட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்ப காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல்வேறு வகையான காவடிகளை ஊர்வலமாக வந்தனர்.
நான்கு மாட வீதியில் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா எனப் பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.