கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நடந்த தேரோட்ட திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற கல்யாண பசுபதீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாகக் கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி அம்மன், சௌந்தரனாயகி அம்மன், கணபதி, பாலமுருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட தெய்வங்களுக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண பசுபதீஸ்வரர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிப் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
அப்போது அங்குத் திரண்டிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நான்கு மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். இந்தத் தேரோட்ட திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.