சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும் என பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், 1998-ல் ஜெயலலிதா முதல்முறையாக பாஜகவுடன் கூட்டணி வைத்ததாகவும், அப்போது பெரும்பான்மை பெற்றதாகவும் கூறினார்.
மீண்டும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்துள்ளது என்றும், மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம் என்றும் அவர் கூறினார்.
அரசியல் கட்சிகள் கூட்டணி சேருவதும் பிரிவதும் புதிதல்ல என்றும், ஒரு காரணத்திற்காக பிரிந்தாலும் மற்றொரு காரணத்திற்காக இணைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்ணாமலை தமக்கு பேனா கொடுத்துள்ளார் என்றும், அவர் பேனாவைக் கொடுத்துக் கையெழுத்துப் போடச் சொன்னார் என்றும், இது அவரது பெருந்தன்மையைக் காட்டுவதகாவும் கூறினார். அண்ணாமலை தலைமையில் தமிழக பாஜக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதை மறுக்க முடியாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.