யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுப்போம் என ரவுடிகளுக்கு மறைமுகமாகத் தாம்பரம் காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை, உத்தண்டி பகுதியில் தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து தலைக்கவசத்தின் அவசியம் குறித்த பைக் விழிப்புணர்வு பேரணியை நடத்தின.
இந்த விழிப்புணர்வு பேரணியைத் தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தாம்பரம் மாநகரில் என்கவுண்டர் இருக்குமா என்ற கேள்விக்கு, யாருக்கு எதைக் கொடுக்க வேண்டுமோ, அதைக் கொடுப்போம் என ரவுடிகளுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.