திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, ரயில் நிலையத்தில் குவிந்ததால் கூட்டம் அலைமோதியது.
பங்குனி மாத பவுர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
இரவு முழுவதும் கிரிவலம் சென்ற பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். விழுப்புரத்தில் இருந்து காட்பாடி செல்லும் பயணிகள் ரயிலில் இடம் பிடிப்பதற்காக முண்டியடித்தபடி ஏறினர்.
இதேபோல் பேருந்து நிலையத்திலும் பக்தர்கள் குவிந்தனர். ஆனால் போதிய எண்ணிக்கையில் பேருந்து இயக்கப்படாததால் அவர்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டனர்.