தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே காவல் நிலையம் முன்பாக விஷம் குடித்து உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து, உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நடுக்காவேரி பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரை கடந்த 8ஆம் தேதி விசாரணைக்காக போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனை கண்டித்து தினேஷின் சகோதரிகள் மேனகா மற்றும் கிருத்திகா ஆகியோர் காவல் நிலையம் முன்பாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர்.
இதில், கீர்த்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கீர்த்திகாவின் உறவினர்கள், தினேஷ் மீதுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
5வது நாளாக பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படாததால் கிருத்திகாவின் உடல் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.