நேஷனல் ஹெரால்டு வழக்கில் 700 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த 1937ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு நிறுவனம் காங்கிரஸ் கட்சியிடம் 90 கோடி ரூபாய் கடன்பட்டு இருந்தது. இந்த சூழலில் அந்த நிறுவனத்தை சோனியா மற்றும் ராகுல் காந்தியின் நிறுவனமாக யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தி கடன் தொகையில் 50 லட்சம் ரூபாயை மட்டும் கட்சிக்கு செலுத்தி 89 கோடியே 50 லட்ச ரூபாய் கடனை ரத்து செய்தது.
இதனிடையே நேஷனல் ஹெரால்டு நிறுவனத்துக்கு சொந்தமான 2000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை சோனியா மற்றும் ராகுல் காந்தியின் நிறுவனமான யங் இந்தியா நிறுவனம் அபகரித்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நேஷனல் ஹெரால்டுக்கு தொடர்புடைய 700 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.