நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மரவியல் பூங்காவில் அறிவிப்பு பலகை மஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுற்றுலாத் தலமான இப்பகுதியில் கோடை சீசனை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில் மத்திய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள மரவியல் பூங்காவில் ஏராளமான மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
ஆனால் இது தொடர்பாக சுற்றுலா பயணிகள் அறியும் வகையில் பலகைகள் வைக்கப்படாததால் அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்து காணப்படுகிறது. மேலும் அங்கு பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளன