4 ஆண்டு கால திமுக ஆட்சிக்கு பெரிய எதிர்ப்பு அலை ஏற்பட்டுள்ளதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்,
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாஜக – அதிமுக கூட்டணி தமிழக நலனுக்கானது என தெரிவித்தார்.
தகுதி வாய்ந்த குடும்ப பெண்களுக்கு ரூ.1000 என்று திமுக யாரை கூறுகிறது? என கேள்வி எழுப்பிய அவர், மின்சார கட்டணம், வீட்டு வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சனைகளால் மக்கள் மனநிலை மாறியுள்ளதாக கூறினார்
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் என்றும் நயினார் நாகேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.