முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் சபரீசன் இல்லங்களில் அமலாக்கத்துறை சோதனை நடப்பது உறுதி என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், செயற்குழு பொதுக்குழு அளித்த அதிகாரத்தில் இபிஎஸ் கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
பாஜக – அதிமுக கூட்டணி அச்சத்தால் முதலமைச்சர் ஏதேதோ பேசி வருவதாகவும், மதுபானத்துறை ஊழலில் முதலமைச்சர் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாகவும் கூறினார்.முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் செந்தில் பாலாஜி சிறை செல்லும் நிலை ஏற்படும் என்றும் தம்பிதுரை உறுதிபட தெரிவித்தார்.