தமிழ்நாட்டில் 5 இடங்களில் கோடை வெயில் சதம் அடித்துள்ளது.
கோடை காலம் சூடுபிடித்துள்ள நிலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி அதிகபட்சமாக திருத்தணி, ஈரோடு, மதுரையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
திருச்சி மற்றும் வேலூரில் 100 டிகிரி பார்ன்ஹீட் என்ற அளவில் வெயில் கொளுத்தியுள்ளது. இதனிடையே தமிழகத்தின் வடகிழக்கு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.