காங்கிரஸ் சொந்த நலனுக்காக வக்ஃபு விதிகளை மாற்றியது எனப் பிரதமர் மோடி குற்றம் சாட்டி உள்ளார்.
ஹரியானா சென்றுள்ள பிரதமர் மோடி பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்தார். பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அதிகாரத்திற்காக அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்தது எனக் கூறினார்.
வக்பு பெயரில் லட்சக்கணக்கான ஹெக்டேர் நிலங்கள் உள்ளன எனக் கூறிய மோடி, இந்த திருத்தப்பட்ட வக்பு சட்டத்தின் மூலம் நிலங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.