விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோயிலில் சித்திரை மாத பால்குட அபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதையொட்டி, பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்குச் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.