பழனி வரதமா நதி அணையிலிருந்து ஒட்டன் சத்திரம் தொகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி வரதமா நதி அணியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரை வாய்க்கால் மூலம் ஒட்டன்சத்திரம் தொகுதிக்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்க உள்ளன.
இந்நிலையில் பழனியில் 18 குளங்களுக்கு நீர் பற்றாக்குறை இருப்பதாகக் கூறி, திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் மனு அளித்தனர்.