திருப்பதி ஏழுமலையான் கோயில் மீது ட்ரோனை பறக்கவிட்ட விவகாரத்தில், ராஜஸ்தானைச் சேர்ந்த நபரைப் பிடித்து தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பதி தேவஸ்தானம் மீது 10 நிமிடத்திற்கு மேல் ட்ரோன் பறக்கவிடப்பட்ட சம்பவத்தால் அங்குப் பதற்றமான சூழல் நிலவியது.
இது தொடர்பாக விசாரணை நடத்திய தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் ட்ரோன் பறக்கவிட்ட நபரை அடையாளம் கண்டுபிடித்தனர். முதற்கட்ட விசாரணையில் அவர் ராஜஸ்தானைச் சேர்ந்த யூ-டியூபர் என்பது தெரியவந்துள்ளது.