தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள உப்பிலியப்பன் கோயிலில் ராம நவமியை முன்னிட்டு ராமர் பட்டாபிஷேக நிகழ்வு வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராம நவமியை முன்னிட்டு ஸ்ரீ ராம பிரானுக்கும், சீதா பிராட்டிக்கும் வைர கிரீடங்கள் சூட்டியும், ராமரின் கையில் வெள்ளி செங்கோல் வழங்கியும் பட்டாபிஷேக விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.