திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திமுக கிளைச் செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
கோம்பைபட்டி கிராமத்தில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், மது விற்கப்படும் பகுதிக்குச் சென்று அங்கிருந்த மதுபாடில்களை சாலையில் போட்டு உடைத்தனர்.
இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினரிடம் கிராம மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட சிவமணி என்ற திமுக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.