அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் - தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!
Jul 23, 2026, 12:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 21, 2026, 09:21 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமைச்சர் நேரு துறையில், பணியிட மாறுதலுக்கு சுமார் 366 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கப்பட்டதாக தமிழக டிஜிபிக்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனத்தில் 888 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்றும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் கடந்தாண்டு அக்டோபரில் தமிழக டிஜிபி வெங்கடராமனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

இதனை தொடர்ந்து, கடந்தாண்டு டிசம்பரில், மீண்டும் அமைச்சர் நேரு துறையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக ஆயிரத்து 20 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளதாக 2வது கடிதத்தை அனுப்பினர்.

இந்நிலையில், அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதல் செய்வதற்கு 365 கோடியே 87 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டு உள்ளதாக தமிழக டிஜிபி வெங்கடராமனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது கடிதத்தை அனுப்பியுள்ளனர்.

நேருவுக்கு நெருக்கமானவர்களின் மொபைல் ஃபோனில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆதாரங்கள் மற்றும் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் குறித்த ஆவணங்களை கடிதத்துடன் அனுப்பியுள்ளனர்.

மேலும், பணியிட மாறுதலுக்கு ஒரு லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடி ரூபாய் வரை பணம் வசூலித்துள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Tags: kn nehrutamil Nadu DGPEnforcement Directorate officialsMinister Nehrued wirte letter to tamilnadu dgp
ShareTweetSendShare
Previous Post

சென்னை கொடுங்கையூரில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை!

Next Post

காங்கிரசை சரிகட்டும் முயற்சியில் திமுக – அசாம் தேர்தல் செலவை ஏற்க உள்ளதாக தகவல்!

Related News

எந்த விவாதத்திற்கும் தயாராக இல்லை – மல்லிகார்ஜூன கார்கே

சென்னையில் உருவாகும் மின்சார விமானம் : 2027-இல் சோதனை ஓட்டம் நடத்த முடிவு -சிறப்பு தொகுப்பு!

பழனி கோயில் நில பத்திர பதிவு விவகாரத்தின் பின்னணி என்ன? – சிறப்பு கட்டுரை!

விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக் கூடாது – செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

குதிரை பேர விவகாரத்தில் கைதான இருவர் ஜாமின் கோரி மனுத்தாக்கல் – காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

நாகர்கோவில் சிறையில் கைதி சபரிவர்மன் உயிரிழந்த வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் குறித்து விவாதிக்க தயார் – கிரண் ரிஜிஜு

மெரினாவில் குளு குளு பேருந்து நிறுத்தம் – ஒப்பந்தப் புள்ளி கோரியது சென்னை மாநகராட்சி!

ஆழ்ந்த ஒத்துழைப்பின் மூலமே பன்முகத்தன்மையை உருவாக்க முடியும் – எஸ்.ஜெய்சங்கர்

இன்றைய தங்கம் விலை!

ஈரானின் யுரேனியம் செறிவூட்டும் தளம் அருகே விரைவில் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் உள்ள ஆயிரக்கணக்கான கண்ணிவெடிகள் : அகற்ற முடியாது என கைவிரித்த ஈரான் – சிறப்பு தொகுப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் படிபூஜை – பக்தர்கள் வழிபாடு!

சிக்கிம் நீா்மின் திட்ட சுரங்கப்பாதையில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு!

டெல்லி போராட்டம் தொடர்பாக முன்பே சுற்றறிக்கை வெளியிட்ட அமெரிக்க தூதரகம்!

ஆவின் பால் தட்டுப்பாடும் தவெக அரசின் அலட்சியமும் – நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies