குவைத் நாட்டில் பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களை விடுவிக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
அங்குள்ள தனியார் உணவகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்த 6 தமிழர்கள் மீது, அங்குள்ள தொழிலாளர் நீதிமன்றத்தில் தாஜுதீன் என்பவர் பொய் வழக்கு தொடர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் தங்கள் உடைமைகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், ஒப்பந்த காலம் முடிந்தும் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருவதாகவும் பாதிக்கப்பட்ட தமிழர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர்.