திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை வனப்பகுதியில் அதிகாரிகள் ஆதரவோடு 12 இடங்களில் சட்டவிரோத மதுபான விற்பனை நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்குள்ள பழையூர், புதூர், தாளக்கடை உள்ளிட்ட 12 இடங்களில் சமூக விரோத கும்பலைச் சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பண்டிகை நாட்களில் மதுபான பாட்டில்கள் 3 மடங்கு விலை கூட்டி விற்கப்படுவதாகவும், வனத்துறை சோதனை சாவடி வழியாகவே மதுபானங்கள் சிறுமலை வனப்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.
மேலும், சட்டவிரோத மதுபான விற்பனையைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.