இந்திய ரயில்வேயில் சோதனை முயற்சியாக ரயிலில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி மராட்டியத்தின் மும்பை – நாசிக் வழித்தடத்தில் செல்லும் பஞ்சவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது.
இந்த இயந்திரத்தை வைப்பதற்காக ரயில் பெட்டியில் போதிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோதனை முயற்சியில் வரவேற்பு கிடைக்கும்பட்சத்தில் நாட்டில் பல்வேறு எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் ஏடிஎம் இயந்திரங்களை வைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.