அல்வா கொடுப்பது யார்? : இருட்டுக்கடை வரதட்சணை புகார் - பரஸ்பர குற்றச்சாட்டால் குழப்பம்!
Sep 20, 2026, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அல்வா கொடுப்பது யார்? : இருட்டுக்கடை வரதட்சணை புகார் – பரஸ்பர குற்றச்சாட்டால் குழப்பம்!

Murugesan M by Murugesan M
Apr 16, 2025, 08:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அல்வாவுக்கு பெயர்போன நெல்லை இருட்டுக் கடை உரிமையாளரின் மகள் தமது கணவர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதற்கு அவரது கணவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

யாராவது ஒருவர் நம்மை ஏமாற்ற முயன்றால் “எனக்கே அல்வா கொடுக்க பாக்குறியா” என்று கேட்போம். ஆனால் அத்தகைய அல்வாவை சுவைப்படத் தயாரிக்கும் இருட்டைக்கடைக்கே அல்வா கொடுக்க முயல்வதாக பல்ராம் சிங் என்பவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நெல்லைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் விரும்பி வாங்கிச் சாப்பிடுவது இருட்டுக்கடை அல்வா. 1940-களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவரால் தொடங்கப்பட்டு, தற்போது அவருடைய மூன்றாம் தலைமுறை வாரிசுகளால் நடத்தப்படுகிறது இந்த அல்வா கடை.

மின்விளக்குகள் அதிகமில்லாத காலத்தில் தொடங்கப்பட்டதால் இருட்டுக்கடை என்று பெயர் வந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்தக்கடையின் உரிமையாளரான ஹரிசிங் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

இதனையடுத்து அவரது மனைவி கவிதா சிங் கடையை கவனித்து வருகிறார். இந்த தம்பதியின் மகளான ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோவையைச் சேர்ந்த பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

கல்யாணம் முடிந்து இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில் தமது கணவர் பல்ராம் சிங் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக காவல்துறையில் புகாரளித்துள்ளார் ஸ்ரீ கனிஷ்கா.

எனது கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருக்கிறார். இதுகுறித்து உன் வீட்டில் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டினார். என்னிடம் உனது அம்மாவிடமிருந்து இருட்டுக்கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என கேட்டார். என் கணவரும் அவரது குடும்பத்தாரோ என்னை மிகவும் கொடுமை படுத்தினார்கள் நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன் இது குறித்து மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்திருக்கிறேன் என இருட்டுக்கடை உரிமையாளரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தெரிவித்தார்.

பல்ராம் சிங்கின் கொடுமை தாங்க முடியாமல் ஸ்ரீ கனிஷ்கா தங்களது வீட்டுக்கு வந்துவிட்டதாகவும் அதனைத்தொடர்ந்து இருட்டுக்கடையை தமது பெயருக்கு எழுதித்தர வேண்டும் என மருமகன் மிரட்டுவதாகவும் கவிதா சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையே கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பல்ராம் சிங்கும் அவரது தந்தை யுவராஜ் சிங்கும் தங்கள் மீதான புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இருட்டுக்கடை விவகாரத்தில் யார் யாருக்கு அல்வா கொடுக்க முயல்கிறார்கள் என்பது காவல்துறை விசாரணைக்குப் பிறகே தெரியவரும்.

Tags: இருட்டுக்கடை அல்வாWho gives the halva? : Dark shop dowry complaint - confusion due to mutual accusations!இருட்டுக்கடை வரதட்சணை புகார்
Share
Tweet
SendShare
Previous Post

மகாராஷ்டிரா : சோதனை முயற்சியாக ரயிலில் ஏடிஎம் இயந்திரம்!

Next Post

இந்தியாவுக்கு அடித்த யோகம் : எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு  ட்ரம்ப் அளித்த வரி விலக்கு!

Related News

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies