2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு அவர், அளித்த பேட்டியை மினி டாக்ஸ் பகுதியில் பார்க்கலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது என்று மக்களுக்கு எதிரான திமுக ஆட்சியை ஒழிக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.
திமுகவில் குடும்ப ஆட்சி தான் நிலவுகிறது, கருணாநிதி, ஸ்டாலினைத் தொடர்ந்து உதயநிதி திமுக தலைவராவார் என்றும் பாஜகவில் ஒரு கிளைக் கழக செயலாளர் கூட மாநிலத் தலைவராக உருவெடுக்க முடியும் என நயினார் நாகேந்திரன் உறுதிபட தெரிவித்தார்.
காங். போன்று ஊழல் நிறைந்த அரசியல் கட்சி இல்லை; காங். உடன் தான் திமுக கூட்டணி அமைத்திருக்கிறது என்றும் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என மக்களிடையே காணப்படும் எழுச்சி, 2026 தேர்தலில் நனவாகும் என நயினார் நாகேந்திரன் கூறினார்.