ஹரியானா நில ஒப்பந்தம் தொடர்பான பண மோசடி வழக்கின் விசாரணைக்காக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா 2-வது நாளாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.
அப்போது குருகிராமின் மனேஷர் – ஷிகோபூர் பகுதியில் சுமார் ஏழரை கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட நிலம் சில மாதங்களிலேயே 58 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது குறித்து அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.