கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார்.
கர்நாடக அரசு ஒப்பந்தங்களில் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட மசோதாவால் அரசுக்கு கூடுதல் செலவு எதுவும் நேரப் போவதில்லை என்று மசோதாவின் நோக்க குறிப்பில் கர்நாடக அரசு தெரிவித்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாஜகவினர், இந்த மசோதாவுக்கு எதிராக ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் மனு அளித்தனர். இந்நிலையில், இந்த சட்ட மசோதாவை குடியரசு தலைவரின் பரிசீலனைக்காக ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுப்பி வைத்துள்ளார்.