பந்தலூர் அருகே பழங்குடி இன மக்களின் பாரம்பரிய திருவிழா விமரிசையாக நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் படையேறி பகுதியில் குரும்பர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோயில் வருடாந்திர திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் பங்கேற்று பாரம்பரிய இசைக் கருவியை இசைத்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.