புதுச்சேரியில் மதுபான விடுதி பாதுகாவலர் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயன்ற சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மதுபான விடுதியில் பாதுகாவலராக பணியாற்றி வரும் வசந்தராமன் என்பவர் கடந்த 14-ம் தேதி பைக்கில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார், பைக் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.
விசாரணையில், மதுபான விடுதியில் ரகளை செய்த இளைஞர்களை வசந்தராமன் வெளியேற்றியதாகவும் இதனால் அவரை கொல்ல முயன்றதும் தெரியவந்தது. சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.