2026ம் ஆண்டு திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக – பாஜக கூட்டணியின் இலக்கு என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை ஒட்டி கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு நயினார் நாகேந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக – பாஜக கூட்டணியை பிளவுபடுத்தும் வேலையை ஊடகவியலாளர்கள் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
திமுக ஆட்சியை அகற்றுவதே அதிமுக -பாஜக கூட்டணியின் இலக்கு எனக்கூறிய நயினார் நாகேந்திரன், அமித்ஷா மற்றும் இபிஎஸ் எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம் என தெரிவித்தார்.