விசைத்தறியாளர்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு 30 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஒப்பந்த கூலி குறைத்து வழங்கப்படுவதால் விசைத்தறியாளர்கள் நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தத்தால் விசைத்தறிகள் இயங்காமல் பொருளாதாரம் ஸ்தம்பிக்கும் எனத் தெரிவித்துள்ள நயினார் நாகேந்திரன், திமுக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் விசைத்தறியாளர்களின் கோரிக்கைக்குச் செவி சாய்க்க வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும், விசைத்தறியாளர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கூலி உயர்வை திமுக அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.