சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Sep 3, 2026, 10:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சேகர்பாபு மன்னிப்பு கேட்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Murugesan M by Murugesan M
Apr 17, 2025, 07:20 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கருணாநிதி நினைவிடத்தைக் கோயில் கோபுரம் போன்று அலங்கரித்த அமைச்சர் சேகர்பாபுவின் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் இந்து சமய அறநிலையத் துறையின் மானிய கோரிக்கை நடைபெற்றது. இதனை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் கோயில் கோபுரம் போல  அலங்கரித்து அமைச்சர் சேகர்பாபு வழிபட்டார். அந்த அலங்காரத்தில் கோயிலின் வரைபடம், தமிழக அரசின் சின்னம், இந்து சமய அறநிலையத்துறை என்ற வார்த்தை எழுதப்பட்டு இருந்தது. அமைச்சரின் இந்த செயல் இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

மறைந்த கருணாநிதி அவர்களின் கல்லறை மீது, தமிழகத்தின் தனி அடையாளமான திருவில்லிப்புதூர் கோவிலின் கோபுரத்தை வரைந்து வைத்திருக்கும் திமுக
அரசின் தவறான செயல் கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.

“பொட்டு வைக்காதே, திருநீற்றை அழி, நாமம் என்றால் பழி” என இந்துக்களின் நம்பிக்கைகளையும், இந்து சமயங்களையும் இழிவு செய்து திமுக அரசு இதுவரைக் கேவலப்படுத்தியது போதாதா? சமாதியின் மீது கோவில் கோபுரங்களை வரைந்து இந்துக் கோவில்களின் புனிதத்தையும் கெடுக்க வேண்டுமா?  என கேள்வி எழுப்பியவர், அதுவும் இந்து அறநிலையத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் சேகர்பாபு  இவ்வாறு இந்துக்களின் நம்பிக்கைகளை சீண்டிப்பார்க்கும் மனப்போக்குடன் செயல்பட்டமைக்கு அவர் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், அந்த பிரச்சனைக்குரிய அலங்காரத்தையும் உடனடியாக நீக்கும்படி உத்தரவிட வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags: நயினார் நாகேந்திரன்Shekar Babu should apologize - Nainar Nagendran insists
Share
Tweet
SendShare
Previous Post

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? – ஜெக்தீப் தன்கர் கேள்வி!

Next Post

விசைத்தறியாளர்களின் கோரிக்கைக்கு திமுக அரசு செவி சாய்க்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

அரபிக்கடலில் ஏற்பட்ட மாற்றங்கள் : மழை குறைய வாய்ப்பு? – சிறப்பு தொகுப்பு!

செங்குன்றத்தில் லலிதா ஜுவல்லரியின் 65-வது கிளை திறப்பு!

எந்த பணியில் இருந்தாலும் மனிதத்தன்மையோடு செயல்பட வேண்டும் – ஆளுநர் அர்லேகர்

தவெக ஆட்சியில் தமிழகம் ரிவர்ஸ் கியரில் செல்கிறது – பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக்க வேண்டும் – சட்டப்பேரவையில் தனித்தீர்மானம்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டாலரின் ஆதிக்கத்தை குறைக்க உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் : பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் முடிவு – சிறப்பு கட்டுரை!

வாரணாசி வெள்ள பாதிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி!

சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை!

ரூ. 1, 200 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்ற வளாகம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – ரூ. 5 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் – புதிய கட்டுப்பாடுகளை விதித்தது ட்ரம்ப் நிர்வாகம்!

மேட்டூர் நீர் கடைமடை வரை செல்வது சந்தேகமே – பொன்.ராதாகிருஷ்ணன்

ஆசிய விளையாட்டு போட்டியில் தனிநபர் மற்றும் அணிகளுக்கான போட்டி என இரண்டு பிரிவிலும் பங்கேற்பேன் – பி.வி.சிந்து

சுருக்குமடி வலையை பயன்படுத்த முழுவதும் தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies