திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அருகே சிமெண்ட் கல்லை ரயில் தண்டவாளத்தில் வைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
செங்கோட்டை – ஈரோடு பயணிகள் ரயில் சேரன்மகாதேவி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் சிமெண்ட் கல் வைக்கப்பட்டிருப்பது தொடர்பாக லோகோ பைலட் போலீசாரிடம் புகார் அளித்தார்.
தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், முருகன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.