கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் ஆயுதப்படை காவலரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆலங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் நாகர்கோவில் ஆயுதப் படைப் பிரிவில் காவலராக பணியாற்றி வரும் நிலையில், மனைவியைப் பிரிந்து வாழ்வதாகக் கூறப்படுகிறது.
ராஜாக்கமங்கலம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் ஒருவர் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்த நிலையில், அவரது செல்போன் எண்ணைத் தெரிந்து கொண்டு அவரிடம் ராஜேஷ் ஆபாசமாகப் பேசியுள்ளார்.
மேலும், அவரது வீட்டிற்குச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பெண் அளித்த புகாரின்பேரில் ஆயுதப்படை காவலர் ராஜேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.