சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்தபின் கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் பிணை மனுக்கள் மீது முடிவெடுப்பதாகச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கிருஷ்ணாபுரத்தில் விஷச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த விவகாரத்தில், 21 பேர் கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் கைதான கோவிந்தராஜ் மற்றும் தாமோதரன் ஆகியோர் பிணை கோரி தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐ தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அறிக்கையை ஆய்வு செய்தபின் பிணை வழக்கில் முடிவெடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.