பயங்கரவாத தாக்குதல் குற்றச்சாட்டை நிராகரிக்கும் திமுக அரசு, நாட்டின் பாதுகாப்பை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொண்டிருப்பதை காட்டுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 5 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக வெளியிட்டுள்ள அறிக்கையை எக்ஸ் தளப்பக்கத்தில் பாஜகவின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், திமுக அரசால் சிலிண்டர் வெடிப்பு என நாடகமாடப்பட்ட கோவை தற்கொலை படை குண்டுவெடிப்பில், என்ஐஏ அதிகாரிகள் மேலும் 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தாக்குதலை நிராகரிக்க திமுகவின் தீவிர முயற்சியை குறிப்பிட்டுள்ள அவர், தேசிய பாதுகாப்பை எவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை இது பறைசாற்றுவதாகவும் கூறியுள்ளார்.