திமுக அரசை வீழ்த்த சபதம் எடுத்து செயல்பட வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.
ராயப்பேட்டை YMCA அரங்கில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பாஜக மூத்த தலைவர்கள், தமிழிசை சௌந்தரராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர்கள் வி.பி.துரைசாமி, கரு. நாகராஜன், சக்கரவர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு செங்கோல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய அவர், திமுக அரசு தன்னை தானே அழித்துக் கொண்டு வருவதாகவும், சட்டமன்ற தேர்தலில் திமுகவினர் ஒருவர்கூட வெற்றி பெற மாட்டார்கள் என தெரிவித்தார்.
அதிமுக கூட்டணிதான் எங்கள் இறுதியான முடிவு என்றும் உறுதியான முடிவு என்றும் கூறினார். தான் தென்றலும் இல்லை; சூறாவளியும் இல்லை; உங்களில் ஒருவன் என்றும் அவர் கூறினார்.
சபரிமலைக்கு மண்டல விரதம் இருப்பதுபோல திமுகவை விரட்ட நாம் பாடுபடுவோம் என்றும், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை சேர்ந்த ஒருவர் கூட வெற்றி பெற மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.திமுக அரசு தன்னை தானே அழித்துக்கொண்டு வருவதாகவும் அவர் சாடினார்.