சென்னை, வடபழனி அருகே காவல்நிலையம் முன்பாக அமைந்துள்ள அரசு மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுவிற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பவர் ஹவுஸ் சிக்னல் அருகே உள்ள டாஸ்மாக் கடை மதியம் 12 மணி அளவில் திறக்கப்பட வேண்டிய நிலையில் காலை முதலே திறக்கப்பட்டு மதுவிற்பனை நடைபெற்றுள்ளது.
இதில் ஜிபே செய்யும் வசதி, குளிர்பானங்கள் உள்ளிட்ட இதர வசதிகளும் செய்யப்பட்டு மதுவிற்பனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆரம்பச் சுகாதார நிலையம் அருகிலும், காவல்நிலையத்திற்கு எதிரிலும் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் கடையில் தங்கு தடையின்றி காலை முதலே மது விற்பனை நடைபெறுவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
இது தொடர்பாகப் பலமுறை புகாரளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்த அப்பகுதி மக்கள், கடை ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தனர்.