தொடர் விடுமுறையையொட்டி நெல்லை அகஸ்தியர் அருவியில் சுற்றுலாப் பயணிகள் உற்சாக குளியலிட்டனர்.
பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமான அகஸ்தியர் அருவிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த சுற்றுலாப் பயணிகள், குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
முன்னதாக, தடை செய்யப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பிறகே அருவிப்பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் அருவிப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது.