தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகள் குறித்து டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் உடன் விரிவாக விவாதித்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்-ஐ தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி,
இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க தலைநகரான வாஷிங்டன் டிசி-யில் எலான் மஸ்க்-ஐ சந்தித்ததாகவும், அப்போது அவருடன் விவாதித்த பல்வேறு தலைப்புகள் தொடர்பாக இன்றைய உரையாடலின்போது விவாதம் மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு குறித்தும் கலந்தாலோசித்ததாகக் கூறியுள்ள பிரதமர் மோடி, இத்துறைகளில் அமெரிக்காவுடனான கூட்டாண்மையை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.