சென்னை, கிண்டி அருகே திரைப்பட நடிகர் பாபி சிம்ஹாவின் கார் ஓட்டுநர் மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பாபி சிம்ஹாவிடம் ஓட்டுநராக பணியாற்றி வரும் புஷ்பராஜ் என்பவர், கத்திப்பாரா அருகே காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரம் மோதி விபத்துக்குள்ளானது. மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் புஷ்பராஜை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த விபத்தில் சாலை ஓரம் நின்றிருந்த பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். மேலும் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்த நிலையில். புஷ்பராஜ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் புஷ்பராஜ் ஓட்டி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.