எதிர்க்கட்சிகள் வாதம் புஸ்ஸ் : பிசுபிசுத்துப்போன வக்ஃப் எதிர்ப்பு - பின்னணி காரணம் என்ன?
Sep 22, 2026, 06:38 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

எதிர்க்கட்சிகள் வாதம் புஸ்ஸ் : பிசுபிசுத்துப்போன வக்ஃப் எதிர்ப்பு – பின்னணி காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Apr 19, 2025, 07:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வக்ஃப் சட்டத் திருத்தத்தை இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்று கூறிவந்த நிலையில், அச்சட்டம், இந்தியாவில் அமலுக்கு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் ஒரு மாவட்டத்தைத் தவிர நாடெங்கும் வக்ஃப் திருத்தச் சட்டத்தை மக்கள் வரவேற்றுள்ளனர்.  சர்ச்சைக்குரிய சட்டம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் முத்திரை குத்தப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தம் ஏன் முக்கியமானது ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

நூற்றுக்கணக்கான முஸ்லிம் விதவைகளின் கடிதங்களே வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தைச் சீர்திருத்தும் பணியை  மேற்கொள்ள வழிவகுத்தன என்று கூறியுள்ள பிரதமர் மோடி, வக்ஃப்  சொத்துக்கள் முறையாக நிர்வகிக்கப் பட்டிருந்தால், முஸ்லிம் இளைஞர்கள் சைக்கிள் பஞ்சர் போடும் வேலைக்குச் சென்றிருக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

வக்ஃப் சொத்துக்கள் ஏழை முஸ்லிம்களுக்குச் சொந்தமானவை என்றும், ஆனால், அந்த சொத்துக்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்குக் கொடுக்கப்படுகிறது என்று நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டி இருந்தார்.

பெரும்பாலான இஸ்லாமிய மக்களால் வைக்கப்பட்ட  கோரிக்கைகளின் அடிப்படையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தில் கிட்டத்தட்ட 40 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.  இந்த சட்டத் திருத்தம் வந்தால், CAA குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் NRC  தேசிய குடியுரிமைப் பதிவேட்டைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை போராட்டங்களைப் போல், இதற்கும் நாடெங்கும் முஸ்லிம்களின் போராட்டங்கள் நடக்கும் என்று எதிர்க்கட்சியினர் எச்சரித்திருந்தனர்.

ஆனால், மேற்கு வங்கத்தின் ஒரு எல்லையோர மாவட்டத்தில் நடந்த வன்முறை போராட்டம் மற்றும் தென் மாநிலங்களில் நடந்த சில போராட்டங்களைத் தவிர வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மக்கள் போராட வில்லை என்பதே உண்மை.

NRC மற்றும் CAA விஷயத்தில் தனது உரிமைக்கே ஆபத்து போல என்று பயந்து வீதிக்கு வந்து போராடினார்கள். ஆனால், தனிப்பட்ட உரிமைகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை, மாறாக,தங்கள் உரிமைகள் காப்பாற்றப்படுகிறது என்பதால், இந்த சட்டத்தை  எதிர்க்க இஸ்லாமியரே தயாராக இல்லை.

வக்ஃப் வாரியம் எந்தவொரு சொத்தையும் சரிபார்க்காமல் உரிமை கோர முடியும் என்பது உட்படச்  சொத்துக்கள், நிலங்கள் மீது இருக்கும் தன்னிச்சையான அதிகாரங்கள் புதிய சட்டத்தில் முற்றிலுமாக நீக்கப் பட்டுள்ளன. மேலும், வக்ஃப் வாரியத்தின் சொத்து குறித்த சர்ச்சைகளில்  இறுதி முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த வாரம், வேலூரில் காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த சுமார் 150 குடும்பங்களின்    நிலங்களை வக்ஃப் சொத்து என்று அறிவிக்கப் பட்டுள்ளது. நான்கு தலைமுறைகளாக இக்கிராமத்தில் வசித்து வருவதாகவும்,,நிலத்துக்கான உரிய ஆவணங்கள்  வைத்திருப்பதாகவும், அரசுக்கு நில வரி செலுத்துவதாகவும் கூறுகின்றனர்.  இந்த பிரச்சனை தொடர்பாகக் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிட்டுள்ளனர்.

இதே போல் ஏற்கெனவே, 1500 ஆண்டுகள் பழமையான சோழர் கால கோவிலுக்குச் சொந்தமான நிலம் உட்பட 480 ஏக்கர் நிலத்தை வக்ஃப் சொத்து என்று கூறிய போது, திருச்செந்துறை கிராமம் அதிர்ச்சி அடைந்தது.

இந்த இரண்டு கிராமங்களிலும், முஸ்லிம்களே  அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.    இதன் மூலம், வக்ஃப் வாரியங்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை என்று தெரிய வருகிறது. இந்த சூழலில் தான்,  வக்ஃப் சட்ட திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக  பெரும் போராட்டங்கள் இல்லாதது, முஸ்லிம்கள் இந்த சட்டத்தை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

வக்ஃப் சட்டத் திருத்தம் –  இது முஸ்லிம்களுக்கு எதிரான சட்டம் அல்ல.  இது நீதிக்கான சட்டமாகும். வக்ஃப்பை வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றும் சட்டம் என்று கூறப்பட்டுள்ளது. வக்ஃப் சொத்துக்களைப் பாதுகாக்க,முறையாக நிர்வகிக்க, அபகரிப்பைத் தடுக்க, டிஜிட்டல் தரவுத்தளத்தை உருவாக்கக் கொண்டுவரப் பட்ட சட்டமாகும்.  துருக்கி மற்றும் கத்தார் போன்ற நாடுகளில் உள்ள வக்ஃப் சட்டங்களைப் போலச் சர்வதேச தரத்துடன் இந்த சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

Tags: 2025 parlimentOpposition parties argue: What is the underlying reason behind the divisive Wakf movement?வக்ஃப் எதிர்ப்புவக்ஃப் சட்டத் திருத்தம்
Share
Tweet
SendShare
Previous Post

வாக்காளர் பட்டியல் திருத்தம் – தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மதுபோதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்திய நடிகரின் கார் ஓட்டுநர்!

Related News

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies