ஈஸ்டர் திருநாளையொட்டி பிரதமர் மோடி, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட தவைர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளன்ர்.
பிரதமர் மோடி விடுத்துள்ள பதிவிடில, அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் மகிழ்ச்சியான ஈஸ்டர் வாழ்த்துக்கள். உலகம் முழுவதும் ஜூபிலி ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுவதால் இந்த ஈஸ்டர் திருநாள் சிறப்பு வாய்ந்ததாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விடுத்துள்ள பதிவில், சக மனிதர்களின் பாவங்களைப் போக்க, சிலுவையை ஏற்று மரித்த இயேசுபிரான், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், புதிய தொடக்கத்தையும், நம்பிக்கையையும் குறிக்கும் இத்திருநாளில், அனைவரின் வாழ்விலும், அன்பும், சமாதானமும், மகிழ்ச்சியும், அமைதியும் நிலவ வேண்டும் என்று, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
இயேசு பிரான் உயிர்த்தெழுந்த திருநாளைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சொந்தங்களுக்கும் எனது ஈஸ்டர் தின வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார்.