திமுக கூட்டணியை நம்பி விசிக இல்லை என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், திமுகவை மட்டுமே விசிக நம்பியிருப்பது போன்ற பிம்பத்தை கட்டமைக்க முயற்சி நடப்பதாக தெரிவித்தார்.
தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் விடுதலை சிறுத்தைகளால் எடுக்க முடியும் என்றும் அவர் கூறினார்.
ஒரு நாள் கூட ஓய்வு இல்லை, ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என தெரிவித்த அவர், “விழாக்களில் கலந்து கொள்ள கட்சியினர் கட்டாயப்படுத்துவது மன அழுத்தத்தை தருவதாக கூறினார். விழாக்களில் பங்கேற்பதால் கட்சி பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றும் திருமாவளவன் கூறினார்.