தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெறுபவர்களை பற்றி இபிஎஸ், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இரட்டை இலை – தாமரை உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி என தெரிவித்தார். திமுகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதே நமது இலக்கு என்றும் கூறினார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் யார் யார் இடம்பெறுவர் என்பதை இபிஎஸ், அமித் ஷா ஆகியோர் முடிவு செய்வார்கள் என்றும், “வாழ்க” என்ற வார்த்தையை பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தினார்.
இணையதளத்தில் தொண்டர்கள் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். நமது கட்சி ஒழுக்கமான, கட்டுப்பாடான தேசிய நலன் சார்ந்த, தேசபக்தி நிறைந்த கட்சி என்றும், ஒரு பதிவு போட்டால் அது நியாயமாக இருக்கும் என அனைவரும் மதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.