மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் மேகதாது அணை பணிகளை நாளையே தொடங்க தயார் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா தெரிவித்துள்ளார்.
பெலகாவியில் விவசாயிகளுக்கு சுமார் 400 கோடி ரூபாய் மதிப்புள்ள விவசாய இயந்திரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.,இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் சித்தராமைய்யா, விவசாயிகளுக்கு உபகரணங்களை வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், மேகதாது மற்றும் மகதாயி அணை திட்டத்திற்கு மத்திய வனத்துறையிடமிருந்து இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும், அனுமதி கிடைத்தால் நாளையே பணிகளைத் தொடங்குவோம் எனவும் தெரிவித்தார்.
நீர்ப்பாசனத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.