தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே புதிய மதுபான பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்துக் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய எலைட் மதுபான பார் அமைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்குத் தொடக்கம் முதலே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக, தவெக, விசிக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் சாலை மறியல் போராட்டம் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் போராட்டக்காரர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.