ஒன்றுக்கும் பயனில்லாத விஷயங்களை வைத்து, தமிழக மக்களை ஏமாற்றும் வகையில், திமுக அரசியல் செய்து கொண்டிருப்பதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பாஜகவின் வழக்கறிஞர் பிரிவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக சட்டப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அஸ்வத்தாமன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவும் பாஜகவும் சித்தாந்த ரீதியாக இணைவதற்கு தகுதியான கட்சிகள் எனவும், திமுக கூட்டணித்தான் பொருந்தா கூட்டணி எனவும் விமர்சித்தார்.
மேலும், அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதியப்படுவதோடு மட்டுமின்றி, அமைச்சர் பதவியில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.