தமக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி ராமநாதபுரம் தொகுதி எம்பி நவாஸ்கனி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலில், ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட நவாஸ்கனி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை விட ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நவாஸ்கனியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி நவாஸ்கனி மனுத்தாக்கல் செய்த நிலையில், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.